ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடம்… அங்கு ஒரு சிறிய அழகிய வீடு… உங்களுக்கு வேண்டுமா… இதோ விற்பனைக்கு வந்துள்ளது…

அமெரிக்காவின் பாலைவனத் தீவில் ‘உலகிலேயே தனிமையான வீடு’ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடம்…அங்கு ஒரு சிறிய வீடு…

இயற்கையின் சத்தத்தை ரசித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் வாழும் நம்மில் பலரும் இந்த ஆசை அடிக்கடி துளிர்விடுவதுண்டு. அந்த ஆசையை நனவாக்க அமெரிக்காவின் ஒரு தீவில் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. கேட்பதற்கே இனிமையாக, அதேசமயம் சற்று பயமாகவும் இருக்கிறதல்லவா? ஆம். அமெரிக்காவின் மைன் மாகாணத்தில் ஒரு பாலைவனத்தீவில் அமைந்துள்ள வீடுதான் உலகிலேயே தனிமையான வீடு என சொல்லப்படுகிறது. 2009இல் இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது.

540 சதுர அடியில் ஒரே ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை முன்புறம் ஒரு தாழ்வாரம் என இந்த வீடு மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. டக் லெட்ஜெஸ் என்ற தீவில் அமைந்துள்ள இந்த வீடானது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 339,000 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்புப்படி ரூ.2.5 கோடிகள் மதிப்புப்பெறுகிறது இந்த தனிமை வீடு.