என்னது!! அப்படியா… 2-வது திருமணமா..? அரசு ஊழியர்களே உஷார்- தமிழக அரசு கடும் நடவடிக்கை.!!

2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது..

தமிழக அரசு இதுகுறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில். 1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 2-வது திருமணம் செய்வது என்பது ஒழுக்கக் கேடானது எனவும், அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்தால், சட்டரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள அரசு, முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது..