நீலகிரிக்கு வரும் வெளி மாவட்ட மாநில வாகன வியாபாரிகளால் வணிகர் வாழ்வாதாரம் பாதிப்பு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டது.

உதகை -மே :3 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் K. முஹம்மது பரூக் நீலகிரி மாவட்டத் தலைவர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜே. தாமஸ், மாநில இணைச்செயலாளர் என் ராஜா முகமது, M. குலசேகரன் நிலகிரி மாவட்டச் செயலாளார் J.B.S. லியாகத் அலி நிலகிரி மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இணைந்து உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டது, மனுவில் நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையால் ஏற்படும் சிக்கல்களை மாவட்ட மக்களிடம் நேரடியாக கேட்டு அவர்களின் சிக்கல்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம், மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மொத்தமாக. பெரிதும் சிறிதுமாக. 18000. கடைகள். செயல்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டத்தை பொருத்தமட்டும். ஆண்டில். ஆறு மாதம் மழை காலம். இரண்டு மாதம்கடும் குளிர் காலம். தவிர்த்து. 100 நாட்கள் மட்டுமே. வணிகம்செய்து. ஆண்டு முழுவதும் உண்டான. எங்களது கடைகளுக்கானவாடகை. மின் கட்டணம். மத்திய மாநில அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகள் ,கடையில் பணிபுரியும்பணியாளர்களுக்கானசம்பளம். இந்த செலவுகளை எல்லாம் கடந்து பின்பு தான்.எங்களதுகுடும்பத்திற்கான. தேவைகள். குழந்தைகளுக்கான கல்விச் செலவு. பெரியவர்களுக்கான செலவு. ஆகிய அனைத்தையும். எங்களுக்கான நூறு நாட்களில் நேரம்காலம் பார்க்காமல் உழைத்து. எந்த ஒரு பண்டிகையும்எங்களுக்காககொண்டாடாமல். எந்த ஒரு விழாவிலும் கலந்துகொள்ளாமல். எங்களது வணிகத்தை செய்து. எங்களது வாழ்க்கையை ஓட்டி வருகின்றோம், இவ்வாறான சூழ்நிலையில். வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து. பிக்கப் கூட்ஸ் ஆட்டோ. போன்ற வாகனங்களில். காய்கறிகள் பழங்கள். ஜவுளிபொருட்கள். காலணிகள். பாத்திரங்கள், வீட்டுக்குத் தேவையான. அலங்காரப் பொருட்கள். கம்பளிகள், உள்ளிட்ட. எல்லாபொருட்களையும். வெளி மாநில வெளி ஊர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வாகன வியாபாரிகள் நாள்தோறும் நுழைந்து குன்னூர் கோத்தகிரி கூடலூர் உதகை அனைத்து கிராம பகுதிகளிலும் கொண்டுவந்து வியாபாரங்களை நூறு நாட்களில்.அனைத்து பொருட்களையும் விற்றுவிட்டு. தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விடுகிறார்கள், இவர்களுக்கு. கடை வாடகையும் கிடையாது. வரிகளும் கிடையாது. ஆண்டுமுழுவதும் தொழில் செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமும்கிடையாது, இதனால் நீலகிரி உதகை பகுதியில் உள்ள வியாபாரிகள் கடைகளை வைத்து வியாபாரம் செய்வது இன்று பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது, இதுபோன்ற வாகன வியாபாரிகளால் கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இதனால் வாடிக்கையாளர்களின் வருகை குறையப்படுவதால் நாள்தோறும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர், இதற்கு நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது,இது ஒரு புறம் இருக்க, மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்கள் ஊட்டி காப்பி ஹவுஸ் பகுதி நடைபாதைகள், மணிகூண்டு லோயர் பஜார் நடை பாதைகள், மிக முக்கியமான நடைபாதைகளிலும் உதகை அரசு தாவீரியவியல் பூங்கா நடைபாதைகள் தற்போது முற்றிலும் புதிய கடைகள் வைப்பதால் நடந்து செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடமில்லாமல் சீர் குலைந்து உள்ளது, மற்றும்புதிதுபுதிதாக. மாவட்ட முழுவதும் நடைபாதைகளை ஆக்கிரமித்து  நடைபாதைகளிலே கடைகளை வைப்பதால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடைஞ்சல் செய்கின்ற விதமாகவும் சிறு வியாபாரிகளில் வாழ்வாதாரத்தை முற்றிலும் அளிக்கின்ற, நடைபாதை வாகன வியாபாரிகளாலும் நீலகிரி உதகை பல பகுதிகளில் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்று நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. முகமதுபாரூக், மாவட்ட செயலாளர் எம் குலசேகரன், மாவட்ட பொருளாளர் J. B. S.லியாகத் அலி, ஆகியோர் முன்னிலையில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சங்கத்தின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது, நீலகிரி மாவட்டத்தில். உள்ள ஆறுதாலுகாக்களிலும். இப்ப பிரச்சினை உள்ளது. சமீபத்தில் கூட. கூடலூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு. பிரச்சனையில். உயிர் இழப்புகூட. ஏற்பட்டது என்பதை. சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நகரின் முக்கியமான இடங்களை ஆக்கிரமித்தும், வியாபாரம் செய்து வரும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் வெளியூர். வாகன வியாபாரிகள். தற்பொழுது ஒரு படி முன்னேறி. மாவட்டத்திலுள்ள அனைத்து தேசிய மாநில நெடுஞ்சாலைகளிலும். கடைகளை வைத்து. வியாபாரம் செய்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வந்து. பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இதனை முழுமையாக கண்டறிந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க. நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனுவினை நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.