500 கிலோ புகையிலையுடன் ஒருவர் கைது.!!

கோவை : மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான S.M. நகர் பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ரோடு எஸ். எம். நகரைச் சேர்ந்த முகமது யூசுப் மகன் முகமது யாசின் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2024 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 192 நபர்கள் மீது 188 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 699.055 கிலோ கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். குற்றங்களை தடுத்திட தயங்காமல் அழைத்திடுங்கள்!!! காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.