கோவை பிரபல மில்லில் பஞ்சு வாங்கி விட்டு12 லட்சம் மோசடி..!

கோவை சவுரிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் செல்வம். இவர் கோவையில் உள்ள பிரபல மில்லில் கணக்கு மேலாளராக மேனேஜராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது நிறுவனத்தை தொடர்பு கொண்ட திருப்பூர் வடிவேல் நகர் பகுதியில் சேர்ந்த கதிரவன் என்பவர் தான் கிரீன் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தங்கள் நிறுவனத்திற்கு பஞ்சு தேவை எனவும் கூறியிருக்கின்றனர் .இதை அடுத்து கதரவன் கோவையில் உள்ள மில்லிற்கு 24 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் காண வங்கி செக்கை அனுப்பி வைத்தார். இதை நம்பி மில்லில் இருந்து பஞ்சு அனுப்பி வைக்கப்பட்டது. பஞ்சை பெற்றுக் கொண்ட கதிரவன் நான்கு லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார் .மேலும் மீதமுள்ள தொகையை தராமல் இருந்து வந்துள்ளார். ஏற்கனவே கொடுத்துள்ள செக்கை வங்கியில் போட்ட போது பணம் இல்லை என திரும்பி வந்தது .இதை தொடர்ந்து பலமுறை கதிரவனிடம் மீதமுள்ள 12 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு வந்தனர். ஆனால் பணத்தை தராமல் தொடர்ந்து இருந்து வந்துள்ளார். இதை அடுத்து செல்வம் பீளமேடு போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கதிரவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.