ஊர் ஊராக காரில் சென்று நகை கொள்ளையடித்த தந்தை தாய் மகன் மூவரும் கைது

ஊர் ஊராக காரில் சென்று நகை கொள்ளையடித்த தந்தை தாய் மகன் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை பாரதியார் ரோட்டில் வசிப்பவர் ராமு இவரது மனைவி நாகம்மாள் இவர்களது மகன் சத்யா இவர்கள் மூவரும் காரில் ஊர் ஊராகச் சென்று நகை கொள்ளை அடிப்பது வழக்கம் நாகம்மாள் பஸ்ஸில் ஏறி உடன் பயணிக்கும் பெண்களிடம் நகை திருடுவார் அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸில் இருந்து இறங்கிக் கொள்வார் அவரை காரில் செல்லும் கணவர் அல்லது மகன் பிக்கப் செய்து கொள்வர் இவ்வாறு சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தினர் உல்லாசமாக செலவு செய்து வந்தனர். இவர்களிடமிருந்து மாருதி சுசுகி கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர்கள் கொள்ளையடித்த பணத்தில் கோவையில் சொந்த வீடு வாங்கியதும் தெரியவந்துள்ளது சத்யாவின் மனைவி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது இந்த குடும்பத்தினர் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன கொள்ளையடித்த பணத்தில் மலேசியா சிங்கப்பூர் அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு குடும்பத்தினர் உல்லாச சுற்றுலா சென்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்