கோவை. மே.12-கோவை,
ஆர். எஸ். புரம், வி.சி. வி.ரோட்டில் ஒரு ஓட்டல் உள்ளது. இங்கு வட மாநில வாலிபர்கள் மற்றும் பலர் வேலை செய்து வருகிறார்கள்.
ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்குவதற்கு ஓட்டலின் மேல் பகுதியில் அறை உள்ளது.
இங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிராஜ் ( 22), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகுல் பெகு ( 29) வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. அதை வாங்கியதும் இருவரும் தங்கும் அறையில் இருந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஜெகுல் பெகு, ரிஷி ராஜி மார்பில் கத்திரிக்கோலால் குத்தினார். இதனால் ரத்தம் வழிந்த நிலையில் அலறி பிடித்த ரிஷி ராஜின் சத்தம் கேட்டு அங்கு வந்த ஒட்டல் மாஸ்டர்சுஜித் , மற்றும் ஊழியர்கள்ரிஷி ராஜை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. இதுகுறித்து ஓட்டல் மேலாளர் ஜோதி பாசு, ஆர். எஸ் .புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து ஜெகுல் பெகுவை கைது செய்தனர்..இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார்.