கோவை மணியக்காரன் பாளையம் பக்கம் உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் ( வயது 28) பில்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி கும்பிடசென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் சங்கரேஸ்வரன் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .
இதேபோல பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் ரங்கசமுத்திரம் .லட்சுமி நாராயணன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் குமார் ( வயது 45 )மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் சரவணம்பட்டி வந்திருந்தனர்,அட்மிஷன் முடித்துவிட்டு மாலையில் வீடு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை காணவில்லை யாரோ கொள்ளை அடித்து சென்று விட்டனர். இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.