சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்: கோவையில் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலிசில் ஒப்படைத்தனர்.

கோவையில் அதிகரித்துவரும் சங்கிலி பறிப்பு நிகழ்வுகளால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மா என்ற 65 வயது பெண்மணி அந்தபகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார். இந்த நிலையில் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரெனெ கண்ணம்மாள் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துள்ளனர். கண்ணம்மாளின் அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தப்பியோட முயன்ற கொள்ளையர்களை துரத்தியதில் ஒருவனை மடக்கி பிடித்துதனர் ஒருவன் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்ட நிலையில் பிடிபட்ட கொள்ளையனை பொதுமக்கள் தர்ம அடிகொடுத்து கோவை போத்தனூர் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது, இராமனாதபுரம் மாவட்டம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சேதுபதி என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர் குறித்து சேதுபதியிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.