மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும்  உயர்வு – சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்து ரூ.92,800-க்கு விற்பனை செய்கிறது.கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களும், நகைப் பிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.135 அதிகரித்து, ரூ.11,600-க்கு விற்பனையாகிறது.கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் நகைப் பிரியர்கள் நிம்மதியடைந்திருந்தனர். இந்நிலையில், இன்று திடீரென ஏற்பட்டுள்ள விலை உயர்வு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே தொடர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கு விற்பனை செய்யப்படுகிறது.