ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் முதல்முறையாக ஒன்றாக சந்தித்து கைகுலுக்கிய அரிய காட்சி இது.ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33-ஆவது மாநாடு சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அந்த அமைப்பில் உள்ள அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலும் எலியும் பூனையுமாக காட்சி தரும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா தலைவர்கள் ஒன்று கூடுவது, வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்பதால் இந்த உச்சிமாநாடு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.இந்த நிலையில், சீனா வந்த அமெரிக்க அதிபர் டிரம்பை வழக்கத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கே சென்று ஷி ஜின்பிங் ஆரத்தழுவி வரவேற்றார். மாநாட்டுக்கு மத்தியில் இன்று நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில், மத்திய கிழக்குப் போர், உக்ரைன் – ரஷ்யா போர், அணு ஆயுதங்களை குறைப்பது போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து 3 நாடுகளின் தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.
டிரம்ப் – ஷி ஜின்பிங் – புதின் ஒரே மேடையில் சந்திக்கும் அரிய நிகழ்வு








