தமிழ்நாட்டின் பொதுப் பணித்துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் ஆர்ஜுனா கடந்த 2012- ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் லால்குடி அ.தி.மு.க எம்.எல்.ஏ.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்வில் அங்கமாக இருந்த நிலையில், நண்பர்களாக, வாழ்க்கைத் துணைவர்களாக மற்றும் பெற்றோர்களாக வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களை ஒன்றாக கடந்து வந்த இந்த பயணம் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது.
இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க பரஸ்பரம் முடிவெடுத்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் அதே வேளையில், இணைந்து குழந்தையை வளர்ப்பதிலும் எங்கள் குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதிலும் எங்களின் அர்ப்பணிப்பு எப்போதும் எங்களின் மிகப்பெரிய முன்னுரிமையாக இருக்கும்.ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். அவர் தேர்ந்தெடுத்து செய்யும் அனைத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க மனமார வாழ்த்துகிறேன். இந்த மாற்றத்தை நாங்கள் கடந்து செல்லும் வேளையில், உங்களின் புரிதல், அன்பு மற்றும் எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கணவருடன் இருக்கும் புகைப்படங்களை டெய்சி சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.








