யானைக்கு வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்த எஸ்.பி.வேலுமணி! 🐘🍌

யானைக்கு வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்த S.P.வேலுமணி!

சாடிவயல் யானைகள் முகாமைப் பார்வையிட்ட S.P.வேலுமணி – யானைக்கு வாழைப்பழம் வழங்கி மகிழ்ச்சி. மலைவாழ் மக்களையும் நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்!

கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாடிவயல் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை நேரில் சென்று சந்தித்த முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏவுமான S.P.வேலுமணி.அவர்களிடம்  அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சாடிவயல் யானைகள் முகாமிற்குச் சென்ற S.P.வேலுமணி, முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளின் நலன் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்துப் பார்வையிட்டார்.அப்போது முகாமில் இருந்த யானைக்கு அவர் அன்புடன் வாழைப்பழங்களை வழங்கி மகிழ்ந்தார். யானையும் தும்பிக்கையை உயர்த்தி வாழைப்பழங்களை வாங்கி உண்ட காட்சிகள் அங்கு இருந்தவர்களைக் கவர்ந்தன.