கலெக்டர்கள் மற்றும் ஐஏஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

கரூர் கலெக்டராக இருந்த முத்துக்குமரன் – திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகவும்,நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா- தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகவும்,கரூர் மாவட்ட கலெக்டராக பிரசன்னா ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் கலெக்டராக இருந்த மனீஷ் நரவானே – பைபர் நெட் கார்பரேஷன்

நெல்லை மாநகராட்சி கமினராக பிரியா

போக்குவரத்துத்துறை துணை செயலாளராக- பிரியா

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளராக கார்த்திகாவும்

அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக வளர்மதியும்

சேலம் மாவட்ட கைத்தறி மற்றும் பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

போக்குவரத்து துறை துணை செயலாளராக- இந்துமதி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத்துறை திட்ட இயக்குனராக சங்கீதா

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக- காளிதாஸ்

சிதம்பரம் துணை கலெக்டராக- வெங்கடேஸ்வரன்

எல்காட் நிர்வாக இயக்குனராக – ராஜாகிருபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.தமிழகத்தில் 19 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், தென்காசி, கரூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்திற்கு முதல் முறையாக பெண் ஆட்சியர் பணியமர்த்தப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக மோனிகா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் ஆட்சியராக பிரசன்னா ராமசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது. நெல்லை மாநகராட்சி ஆணையராக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக காரணங்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர், தென்காசி, கரூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசன்னா ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக மோனிகா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநராக எஸ். வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கூடுதல் செயலாளராக எஸ்.பி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் ஆட்சியராக இருந்த மனிஷ் நரவானே, ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக பிரியா, சிதம்பரம் சார் ஆட்சியராக வெங்கடேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டுவளர்ச்சி துறை இயக்குநராக சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துணை செயலாளராக இந்துமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.