கொச்சி சிஎம்ஆர்எல் தாது மணல் நிறுவனம், கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தி வந்த எக்சாலாஜிக் என்ற சாப்ட்வேர் நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக ரூ.3.28 கோடி பணம் கொடுத்தது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் கேரள லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கேரள உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி பினராயி விஜயன் உட்பட 3 பேரும் கேரள உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தனர். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் நடராஜன் மற்றும் ஜான்சன் ஜான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பினராயி விஜயன் உட்பட 3 பேர் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. பினராயி விஜயன் மற்றும் மகள் வீணா விஜயன் மீது சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் இருந்து சட்டவிரோதமாக பணம் வாங்கியது தொடர்பாகவும், முகம்மது ரியாஸ் மீது ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.








