🔥எதிர்திசையில் பேருந்து… விபத்துக்கு வெற்றிலை அழைப்பா?! வீடியோ வைரல் 🚨

எதிர்திசையில் பேருந்து… விபத்துக்கு வெற்றிலை அழைப்பா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!

தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து! சூலூர் பகுதியில் விதிமீறல்?

வெள்ளகோவிலில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, சூலூர் விமானப்படை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி எதிர்திசையில் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வெள்ளகோவில் – கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் வேல்முருகன் தனியார் பேருந்து (பதிவு எண்: TN 42 AZ 0747), சாலையில் இடதுபுறமாகச் செல்ல வழி இருந்தும், எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வலதுபுறமாகச் சென்றதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.மேலும், பேருந்து அதிக ஒலியுடன் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டு சென்றதாகவும், இதனால் எதிரே வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பள்ளி நேரத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.