சிறையில் துறவிகளுக்கு காவி ஆடை – புதிய விதிமுறை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகள் சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது அவர்கள் சார்ந்த பௌத்த பீடங்களின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு காவி ஆடை அணிவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் புதிய விதிகளை வரைவு செய்யும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள், அடுத்த வார நடுப்பகுதியில் மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களும் யோசனைகளும் பெறப்படவுள்ளன.ஏற்கனவே தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை இரண்டு வாரங்களுக்குள் ஆய்வு செய்து சமர்ப்பிக்க சிறப்பு நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் முன்மொழியப்பட்ட புதிய விதிகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி செய்து நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.