கூகுள், மெட்டா, xAI கைகோர்த்த புதிய மெகா கூட்டணி

Google சுந்தர் பிச்சை, xAI எலான் மஸ்க், Meta மார்க் ஜுக்கர்பெர்க் என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ‘தலை’கள் பெயர்கள் நமக்கு தெரியும்தான்… ஆனால் இவர்களுடைய கையெழுத்து எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறீர்களா?அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட AI பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம், உலகின் முக்கிய டெக் ஜாம்பவான்களின் கையெழுத்துகளை ஒரே ஆவணத்தில் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணத்தில்,

Google தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

Anthropic தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடி

Meta தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்

OpenAI இணை நிறுவனர் கிரெக் பிராக்மேன்

xAI நிறுவனர் எலான் மஸ்க்

Nvidia தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கையெழுத்தும் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது.

முதலில் சுந்தர் பிச்சையின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

அதற்குக் கீழே டாரியோ அமோடி, மார்க் ஜுக்கர்பெர்க், கிரெக் பிராக்மேன், எலான் மஸ்க், ஜென்சன் ஹுவாங் ஆகியோரின் கையெழுத்துகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.

இடதுபுறத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெரிய கையெழுத்து தனியாக இடம்பெற்றுள்ளது.

சுந்தர் பிச்சையின் கையெழுத்து மிகவும் சுருக்கமாக இருக்கிறது.

எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் கையெழுத்துகளில் அவர்களது பெயரை எளிதில் படிக்க முடியவில்லை.

ஜென்சன் ஹுவாங்கின் கையெழுத்து மற்றவர்களைவிட நீளமாக இருப்பதையும் படத்தில் பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

AI அமைப்புகள் அவற்றை உருவாக்கிய நிறுவனங்கள் திட்டமிட்டபடியே செயல்படுகின்றனவா என்பதை தணிக்கையாளர்கள் மூலம் ஆய்வு செய்வது, AI அமைப்புகள் எதிர்பாராத வகையில் மற்ற தொழில்நுட்ப அமைப்புகளுக்குள் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் சுந்தர் பிச்சை முதல் எலான் மஸ்க் வரை உலகின் முன்னணி டெக் ஜாம்பவான்களின் கையெழுத்துகள் ஒரே ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன.