ஏமாந்தது நான்தான் – பகீர் கிளப்பிய நடிகை அம்பிகா

நடிகை ராதா நேற்று தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரன் மீது போலீசில் புகார் கொடுத்தது தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.அதைத் தொடர்ந்து இப்போது அம்பிகா கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. வீட்டில் அக்காவாக பிறந்து நான்தான் பல தியாகங்களை செய்தேன். ஆனால் இப்போ பணம் குடும்பத்தில் இருக்கும் உறவுகளுக்குள் பிரிவை ஏற்படுத்தி விட்டது என்று கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

நேற்று காலையிலேயே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் கொடுத்தது பெரிதாக பேசப்பட்டது. இதுவரைக்கும் சகோதரிகள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக இருந்தார்களே? இவர்களுக்குள் என்ன ஆனது? என்று எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ராதா தன்னுடைய அக்கா அம்பிகா பெயரில் என்னுடைய அக்கவுண்டில் இருந்து 43. 62 கோடி பணம் ட்ரான்ஸ்லேஷன் பண்ண போயிருந்தது. அதை நான் இப்போது தடுத்து வைத்திருக்கிறேன். என்னுடைய செக்கை திருடி இந்த பண மோசடி செய்திருக்கிறார்கள் என்று கண்ணீருடன் பேசி இருந்தார்.

என்னுடைய வீட்டிற்கு கூட ஒன்றரை வருஷமாக என்னால் போக முடியவில்லை. அவங்க கிட்ட போன் அடிச்சாலும் எடுக்க மாட்டாங்க என்று அவர் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து அம்பிகா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், சின்ன வயசுல இருந்தே என் குடும்பம் கஷ்டப்பட்ட காலத்தில் முதல் படிக்கட்டாக இருந்து பல தியாகங்கள் செய்தது நான் தான்.

என்னுடைய அப்பா ஓணத்துக்கு வீட்டிற்கு வருவாரு. அப்போ என்னுடைய சகோதரிகளுக்கும், எனக்கும் ஒரே போல 3 டிரஸ் எடுத்துட்டு வருவாரு. 3 ட்ரெஸ்ஸும் மூன்று வண்ணத்தில் இருக்கும். அப்போ நீ மூத்த பொண்ணு, உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ என்று அப்பா சொல்லுவாரு. ஆனால் நான் என்னுடைய சகோதரிகள் அவங்களுக்கு பிடித்ததை எடுக்கட்டும் என்று சொல்லி வெயிட் பண்ணிட்டு இருப்பேன். அவங்க ரெண்டு பேரும் பிடிச்சதை எடுத்துக்குவாங்க. அப்புறம் அவங்க வேண்டாம்னு வைத்த டிரஸை தான் நான் போட்டுக்குவேன்.

சில நேரங்களில் நான் எடுத்த டிரஸ் கூட அவங்களுக்கு பிடிக்கிறது என்று சொல்லுவாங்க. அப்போ அந்த டிரஸ்ஸையும் அவங்களுக்காக கொடுத்திடுவேன். அப்படி நாங்க ஒற்றுமையாக அழகு பார்த்தோம். ஆனால் ஒரு காலத்தில் குடும்ப பந்தம் இருந்தா போதும்.. குடும்பத்துக்காக எது வேணா பண்ணலாம்னு நினைப்போம். ஆனா இப்போ அப்படி இல்ல. எல்லாரும் தனித்தனியா இருக்காங்க. நன்றி, சென்டிமென்ட், இதெல்லாம் வாழ்க்கைல இருந்து போயிடுச்சு.

இந்த உலகத்தில் எல்லாமே பணம் தான் என்ற நிலைமை வந்துடுச்சு. பணம் இந்த மனிதர்களுக்குள் எவ்வளவு கிடைத்தாலும் போதாது. இன்னும் வேணும் வேணும்னு நினைக்கிற ஒரே விஷயம் பணம்தான். இப்போ ஏஆர்எஸ் கார்டன் வைத்து பல வதந்திகள் போய்கிட்டு இருக்கு. சிலர் youtube-ல் அந்த கார்டன் எங்களுக்கு எம்ஜிஆர் ஐயா சும்மா கொடுத்தாரு என்று சொல்லுறாங்க. அது கொஞ்சம் கூட உண்மை கிடையாது.

நாங்க கஷ்டப்பட்ட காலத்துல நாங்க வாங்கிய முதல் சொத்து அது. அதை இப்போ விற்பனை பண்ண முடியாது. அதில் லீகல் பிரச்சனை போயிட்டு இருக்குறதால என்னால எல்லாத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. என் மேல ராதா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கா அவ எதுக்காக கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காளோ எனக்கு தெரியாது. இதை பார்த்தால் எனக்கு வேடிக்கையா இருக்கு. ஏன்னா உண்மையிலேயே ஏமாந்து போனவ நான்.

நான்தான் தான் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கணும். ஆனா நான் கொடுக்கல.. இப்ப ராதா கொடுத்திருக்கானா யாரோ அவளுக்கு அட்வைஸ் பண்ணி இருக்காங்க. ஏஆர்எஸ் கார்டன் போர்ட் மாத்திட்டு வேற போர்ட் வைச்சதை பார்த்தபோ என்னால தாங்கிக்க முடியல. ஏன்னா தமிழ் சினிமாவுக்கே ஏஆர்எஸ் கார்டன் என்னன்னு தெரியும். இப்போ அதன் பெயரை மாற்றினாலும் எத்தனை வருஷத்துக்கும் அது ஏஆர்எஸ் கார்டன் தான். அதை யாராலும் மாற்றவே முடியாது என்று அந்த பேட்டியில் கண்ணீருடன் அம்பிகா பேசியிருக்கிறார்.