கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை விமான நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறந்த சேவை வழங்கும் வகையில் பயணிகள் சேவை இயக்கம் ” யாத்ரி சேவா அபியான் ” என்ற திட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை மொத்தம் 24 நாட்கள் நடைபெறுகிறது. பயணிகளுக்கு விமான பயணத்தை எளிதாக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் இந்த பிரசாரம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கலாச்சார நிகழ்ச்சிகள் வழிகாட்டுதல் மருத்துவ முகாம் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துவிட்டது. தற்போது 400 ஏக்கரில் செயல்பட்டு வரும் விமான நிலையம் விரிவாக்க பணிகள் முடிந்த பின்னர் 1,047 ஏக்கராக அதிகரிக்கும். விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே விமான நிலைய விரிவாக்க பணிகள் ரூ. 2,132கோடியில் செய்யப்பட உள்ளது தற்போது உள்ள ஓடுபாதையின் நீளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது .இந்தத் திட்டத்திற்கு நிதி ஆயோக்ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் விரிவாக்க பணிகள் தொடங்கும். தற்போது கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 26 விமானங்கள் இயக்கப்படுகிறது. வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக உயரும். தற்போது இட நெரிசலை குறைக்கும் வகையில் உள்நாட்டு பாதுகாப்பு சோதனை பகுதி விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் கூடுதலாக 1,000 சதுர மீட்டர் பரப்பளவு கிடைக்கும் .இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும். விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது. எனவே தற்போதைய ஒப்பந்ததாரரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நிமிடங்களுக்கு மேல் வாகனத்தைநிறுத்தினால் ரூ 500 அபராதம் விதிப்பது ஒப்பந்ததாரர் அல்ல. அது ஏ .ஐ .செயற்கை நுண்ணறிவு மூலம் விதிக்கப்படுவதாகும். இவர் அவர் கூறினார்.
கோவை விமான நிலையம் விரிவாக்கம்








