வன்ம அரசியலுக்கு செக்… நாற்காலி வேற, நட்பு வேற… புரிய வச்ச தல – தளபதி சந்திப்பு

அரசியல் சாயம் பூசப்படும்னு தெரிஞ்சும் கை கோர்த்தது தைரியம்… அந்த ஒரு கட்டமைப்புல சில்லு சில்லாவா நொறுங்கி போச்சு போலி அரசியல்வாதிகளின் சதி! ஃபேன் வார் வச்சு அரசியல் நடத்திய காலம் மலையேறிடுச்சு… லண்டன்ல நடந்த அந்த ஒரு சந்திப்பு வன்மம் விதைச்சவங்களுக்கு வச்ச செக்! நாற்காலி வேற, நட்பு வேறனு புரிஞ்சுகிட்ட மனுஷன் அஜித்… தலைவனும் நடிகனும் கை கோர்த்தா, நடுங்குறது எதிர்க்கட்சிகள் மட்டும்தான்!

அரசியல்ல ஒரு முதலமைச்சரைக் கட்டிக்கிட்டா நமக்கும் சாயம் பூசிடுவாங்கன்னு அஜித்துக்கு நல்லாவே தெரியும். அதைக் கச்சிதமா தெரிஞ்சுகிட்டுதான், லண்டன் சில்வர்ஸ்டோன்ல முதல்வர் விஜய்யைப் பார்த்து இன்முகத்தோட கைகோர்த்து நின்னார்.

எதிர்காலத்துல அஜித் நேரடியா அரசியலுக்கு வரலைனாலும், விஜய்க்குப் பக்கபலமா நிற்பார்ங்கிறதுதான் தற்போதைய ஹாட் டாபிக். விளையாட்டுத்துறைத் தலைவரா ஆகலாம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்துக்கு ஆலோசகராக்கூட மாறலாம்.

ஆனா ஒண்ணு மட்டும் கன்ஃபார்ம், இனிமே அஜித் ரசிகர்களின் பெயரால அரசியல் கட்சிகள் பண்ற எந்தச் சதியையும் இங்க எடுபட வைக்க முடியாது. அந்தச் சதி வேலைகள் எல்லாத்தையும் முதல்வரோட இந்த லண்டன் விசிட் சில்லு சில்லாவா உடைச்சுப் போட்டுடுச்சு.

இதுவரைக்கும் சினிமாவை வச்சு அரசியல் பண்ணவங்க போட்ட கணக்குகள் எல்லாமே இப்போ தப்பியோடிப் போச்சு. அஜித் – விஜய் சந்திப்பு மூலமா தமிழ்நாட்டுல கொடிகட்டிப் பறந்த தேவையில்லாத ஃபேன் வார் சண்டைக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வச்சிருக்காங்க. எந்தவித சுயநலமும் இல்லாம ரெண்டு பேரும் காட்டின அன்பு, சோஷியல் மீடியாவில் வன்மம் கக்கிட்டுத் திரிஞ்சவங்களுக்கு முகத்துல அறைஞ்ச மாதிரி இருந்திருக்கும்.

விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக, இன்டர்நேஷனல் லெவல்ல ரேஸ் அனுபவமுள்ள அஜித்தோட ஐடியாஸ் அரசுக்கு செம ஸ்ட்ரெங்க்தா இருக்கும். இந்த விசிட் வெறும் அரசியல் சந்திப்பு மட்டும் கிடையாது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு செம்ம மூவ்.

சினிமா எல்லைகளைத் தாண்டி ஆளுமைகளும் தலைவர்களும் ஒண்ணு சேர்ந்து நிக்கிற இந்த ஆரோக்கியமான அரசியல் மாற்றம்தான் இப்போ தமிழ்நாட்டுக்குத் தேவை. வன்மத்தை விதைச்சவங்க ஓரம்போக, வளர்ச்சியும் நட்பும் கைகோர்க்கிற ஒரு புது யுகத்துக்கு இந்த லண்டன் பயணம் அருமையான ஒரு தொடக்கத்தைக் கொடுத்திருக்கு!