கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.அமெரிக்காவில் பிறந்தவரான போப் லியோ கடந்த ஆண்டு மே மாதம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாடிகன் நகரில் வசிக்கும் போப் லியோ, வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அஞ்சல் வழி வாக்களிக்க விண்ணப்பித்துள்ளார். போப் லியோ அமெரிக்காவின் இல்லினாய்ஸ் (Illinois) மாகாணத்தில் உள்ள வில் கவுண்டி தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பித்த அஞ்சல் வழி வாக்களிப்பு விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கான படிவத்தையும் இல்லினாய்ஸ் தேர்தல் அதிகாரிகள் வாடிகனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் வாக்குகளைப் பதிவு செய்து அதனைத் திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில், பதவியில் இருக்கும் போப் ஒருவர் அமெரிக்கத் தேர்தல் ஒன்றில் வாக்களிப்பது இதுவே முதல்முறை.







