மாஜி படை வீரர்கள், விதவைகளுக்கான நிதியுதவி உயர்வு

சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர நேர்காணல் ஒரு பாதுகாப்பான சுயசேவை வசதி மூலம் மேற்கொள்வதற்கும், டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட ஒப்புகை சீட்டுகளை உடனடியாக பெறுவதற்கும் ஒரு முன்னோட்ட அடிப்படையில் ஓய்வூதியதாரர் சுய சேவை முனையம் நிறுவப்படும்.

முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பணக்கொடையினை மேலும் உயர்த்தி குடும்ப தலைவருக்கு ரூ.1,800 ஆகவும், குடும்பத்தில் உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,200 ஆகவும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.600 ஆகவும் வழங்கப்படும்.

முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி பயில வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை அனைத்து படிப்புகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகளுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.4,000-ல் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.