கோவை – மும்பை புதிய விமான சேவை!

கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை பெங்களூர் புதுடெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நாடுகளுக்கும சார்ஜா, அபுதாபி, துபாய், உள்பட வெளிநாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையிலிருந்து மொத்தம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தை ஏர் இந்திய விமானம் முக்கியமான சர்வதேச விமான போக்குவரத்து மையமாக மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் லண்டன் உள்ளிட்ட நீண்ட தூர சர்வதேச நகரங்களுக்கு விமான இணைப்புகள் கிடைக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தினந்தோறும் 2விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கோவையிலிருந்து காலையில் 7.50 மணிக்கு புறப்படும் விமானம் மும்பைக்கு 10:10க்கு சென்றடைகிறது. அதுபோன்றுஇரவு 10-30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் விமானம் நள்ளிரவு 12 40 மணிக்கு சென்றடையும் மணிக்கு மும்பையில் இருந்து அதிகாலை 5 – 25புறப்படும் விமானம் காலை 7:30 மணிக்கு கோவை வரும். மேலும் இரவு 7-55 மணிக்கு புறப்படும் மற்றொரு விமானம் இரவு 9.50 மணிக்கு வந்தடையும்.கோவையில் இருந்து மும்பை வழியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த புதிய விமான சேவை பயனுள்ளதாக அமையும். ஒரே டிக்கெட்டில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். மேலும் உடைமைகளை இறுதியாக செல்லும் இடம் வரைகொண்டு செல்ல பதிவு செய்து கொள்ள முடியும் மும்பையில் இருந்து வேறு விமானத்துக்கு எளிதாக இணைப்பு வசதி கிடைப்பதால் காலதாமதம் தவிர்க்கப்படும் குறிப்பாக மொத்த குடிமக்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணம் செய்வோருக்கு பயணத்தை எளிதாக்கும் இதன் காரணமாக கோவை மும்பைக்கு விமான சேவைக்கு தொழில்துறையினர் உட்பட பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.