தேர்தல் பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தவில்லை – ஐகோர்ட்டில் விஜய் தரப்பு விளக்கம்!

குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கமளித்துள்ளது.

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நிராகரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளை நிராகரிக்க கோரி பதில் மனுதாக்கல் அளித்துள்ளார். அந்த மனுவில் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக தனது வெற்றி செல்லாது என அறிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவு கணக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாக கூறும் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்ததாகக்கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.