கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மிலாது நபி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கடைகள் ,நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், இறக்குமதி செய்யப்பட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மது கூடங்களும் நாளை ( புதன்கிழமை) மூடப்பட்டு இருக்கும். விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும்,சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இருப்பவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்









