சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு கூடுதல் போலீசார் நியமனம்

கோவை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப் பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாநகர பகுதியில் சிங்கப் பெண் அதிரடிப்படைக்கு 4 பெண் சப்இன்ஸ்பெக்டர் 8 பெண் போலீசார் மற்றும் 4 போலீஸ் டிரைவர் ஆகியோரம் மாவட்ட காவல் துறையில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் 4 பெண் போலீசார் 2 போலீஸ் டிரைவர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர் .அனைவரும் சுழற்சி முறையில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 12 மணி வரையும் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சிங்கப் பெண் அதிரடிப்படையில் 2-வது கட்டத்திற்கு கோவை மாநகர பகுதிக்கு 4 பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களும், 8 பெண் போலீசாரும் மாவட்ட காவல்துறையில் 2 பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் 4 பெண் போலீ சாரும் என்று கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாகனங்களும் சீருடைகளும் தயார் நிலையில் உள்ளது. அரசு உத்தரவு வந்ததும் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.