கோவை மாநகர காவல் துறையில் 20 காவல் நிலையங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு பணியாற்றி வந்து 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில் ஆர் எஸ் புரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் குனியமுத்தூருக்கும், வடவள்ளி இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா நுண்ணறிவு பிரிவுக்கும், நுண்ணறி பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வடவள்ளிக்கும், இடமாற்றம் செய்யப்பட்டனர் . இது தவிர குனியமுத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் நுண்ணறிவு பிரிவுக்கும் , நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆர் எஸ் புரத்துக்கும், அதே பிரிவு இன்ஸ்பெக்டர் புகழ் மாறன் சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் , சிறப்பு நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் அமுதா நுண்ணறிவு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல கோவை மாநகர காவல் துறையில் கடைவீதி , ஆர் எஸ் புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 20 காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர மாநகர குற்றப்பிரிவு சைபர் கிரைம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மோப்ப நாய் பிரிவு ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இங்கு ஏராளமான போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 29 சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.








