தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அப்போது, திமுக அரசு, ‘தமிழ்நாடு தீயணைப்பு ஆணையம்” என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்தது.இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய தலைவர் பதவியில் இருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார்.இதேபோன்று, திமுக அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவரான ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.








