கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் பேபி மற்றும் பெண் தலைமை காவலர் கீதா, பெண் காவலர் பவித்ரா ஆகியோர் வால்பாறை பகுதியில் உள்ள புனித இருதய மேல்நிலைப்பள்ளி, காந்தி சிலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். அதன் பின்பு 40 வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தமிழக அரசின் சிங்கப்பெண் அதிரடிப் படையினரின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு








