கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள்

பாகிஸ்தானின் பொருளாதார மையமாகவும், மிகப்பெரிய முக்கியமான நகரமாகவும் விளங்கும் கராச்சியில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

பாகிஸ்தானின் தலைநகரமாக இஸ்லாமாபாத் இருந்தாலும், அந்நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மையமாக விளங்குவது கராச்சி தான். இந்த நிலையில், முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் கராச்சியில் கடந்த சில மாதங்களாகவே நிலைமை மோசமாக இருந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குடிக்க போதிய தண்ணீர் கூட கிடைக்காமல் கராச்சி மக்கள் தவித்து வருகின்றனர்.

கராச்சியில் ஏற்பட்டுள்ள இந்த அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பொருளாதார நிலைமை சீர்குலைந்து காணப்படுவதால் கராச்சி மக்கள் அனைவரும் தெருவில் இறங்கிப் போராடு சூழ்நிலையும் உருவாகியுள்ளது. நகர் முழுவதும் வழக்கமாக வழங்கப்பட்டு வந்த 5.4 கோடி கேலன் குடிநீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் சூழல் நிலவி வருகிறது.

இந்த தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் கராச்சியின் வடகிழக்கு நீரேற்று நிலையத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு கராச்சி நீரேற்று நிலையத்திற்கு செல்லும் மின்சார இணைப்பு மே 31 அதிகாலை 3:27 மணியளவில் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. மின்சார துண்டிப்பால் நீரேற்று நிலையத்தில் சரிவர நீர் ஏற்ற முடியாமல் இருந்த நிலையில், தற்போது குடிநீர் விநியோகம் சரிவர செய்ய முடியாததால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியதிலிருந்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கராச்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக தனியார் குடிநீர் லாரிகளை சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விலைக்கு வாங்கப்படும் குடிநீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துக் கொண்டே செல்வதால் அன்றாடத் தேவைகளுக்கு தண்ணீரை கூட வாங்கி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பழைய உட்கட்டமைப்புகளை பராமரிப்பு பணி மேற்கொள்ளாததே இந்தளவிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கராச்சியில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் நெருக்கடி ஒட்டுமொத்த பாகிஸ்தானின் நிர்வாக சீர்கேட்டையே சீர்குலைத்துள்ளது.

கராச்சியில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு போன்ற முக்கிய அன்றாட தேவைகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான முக்கிய செய்தி கராச்சி மக்கள் தலையில் இடியாக விழுந்துள்ளது. அது தான் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது முக்கியமாக பாகிஸ்தானை பாதித்தது. ஏனென்றால் ஏற்கனவே பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தேவைகளில் நெருக்கடி ஏற்பட்டு வரும் சூழலில் இந்த எரிவாயு தட்டுப்பாடு பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது. இதனால் நாட்டின் நிதி நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

கராச்சியில் ஏற்பட்டுள்ள சில தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக மின்சாரம் துண்டிக்கபட்ட நிலையில் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்த குடிநீர் தட்டுப்பாட்டல் மிகப்பெரிய சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை சீர் செய்ய கராச்சி அரசு உடனடியாக அவசரகால நிலை நடவடிக்கை எடுக்காவிடில் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகப்பெரிய அளவிலான மோசமான நிலைமை உருவாகும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை சரி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து போதுமான குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.