23 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கோவை மாநகர காவல் துறையில் 23 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு :- கோவை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு கண்ணா குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கடைவீதி போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்குக்கும் , கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காட்டூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ரத்தினபுரிக்கும், ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் இளங்கோவன் காட்டூ ருக்கும், சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கோவை மாநகர மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு க்கும் கோவை மாநகர சிறார் உதவி காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கோவை தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், மாற்றப்பட்டுள்ளனர். கோவை தெற்கு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ராமநாதபுரம் புலனாய்வு பிரிவுக்கும், திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு பதிவேடு இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி ஆர். எஸ். புரம். புலனாய்வு பிரிவுக்கும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் கோவை சைபர் கிரைம்பிரிவுக்கும் மற்றும் திருப்பூர் மாநகர வீரபாண்டிகாவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாய்பாபா காலனிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர நல்லூர் இன்ஸ்பெக்டர் தங்கம் வெரைட்டி ஹால் ரோடு புலனாய்வு பிரிவுக்கும் திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா கோவை மத்திய பகுதி மகளிர் காவல் நிலையத்துக்கும் சேலம் மாநகர டவுன் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வடவள்ளிக்கும் , ஈரோடு தெற்குஇன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சிங்காநல்லூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இன்ஸ்பெக்டர் ஜேசீஸ் உதயராஜ் செல்வபுரத்துக்கும், திருப்பூர் மாவட்டம் மூலனூர் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் துடியலூருக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் கந்தசாமி கவுண்டம்பாளையத்துக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கரும்பு கடைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மகளிர் போலீஸ்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் குனியமுத்தூருக்கும்சேலம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரசு மணி சிறார் உதவி பிரிவுக்கும் சேலம் மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பத்மாவதி கோவை மாநகர ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.