சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது. எடப்பாடி பழனிசாமி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தனி அணியாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று சண்முகம் அணி கோரிக்கை வைத்தது.
தவெக அரசு மீது சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தவெக அமைச்சரவையில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான் வேலுமணி அணியினர் அவ்வாறு செயல்பட்டதாக எடப்பாடி தரப்பு குற்றம் சாட்டியது.
தேர்தல் ஆணைய புகாரை திரும்பி வாங்க வேண்டுமென்றால் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து கட்சி பதவிகளையும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று வேலுமணி அண்ட் கோ டிமாண்ட் வைத்துள்ளனர். இரண்டு அணியினரும் சபாநாயகரிடம் வாங்கிய மனுக்களை திரும்பிப் பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறவுள்ளனர். பொதுக்குழு கூட்டுவதை பற்றி இனி மூச்சே விடக்கூடாது என்று எடப்பாடி கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம். இதையொட்டி இரண்டு அணிகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் இரண்டு அணியினரும் ஒன்றாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








