தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், லஞ்சம் கேட்பவர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் பொதுமக்களுக்குத் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் உங்களிடம் வெறும் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட, பொதுமக்கள் சகித்துக் கொள்ளாமல் உடனடியாக ஆதாரங்களுடன் 1064 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தாராளமாகப் புகார் தெரிவிக்கலாம்” என்று கோட்டை வட்டாரத்திலிருந்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
ஊழலுக்கு எதிராகத் தவெக அரசு எடுத்துள்ள இந்த ‘அடிமட்ட ஆக்ஷன்’ (Action) ஒட்டுமொத்த அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் ‘பகீர்’ கிளப்பியுள்ள அதேவேளையில், சாமானிய பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் தாறுமாறாக ரீச் ஆகி அனல் பறந்து வருகிறது.





