சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 9 வழக்கறிஞர்கள் மற்றும் 10 நீதித்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.அதேபோல், வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 19 பேரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்தக்கட்டமாக, இவர்களின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், குடியரசு தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த உத்தரவை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைக்கப்பட்ட 19 நீதிபதிகள்
பி. முருகன்
எம்.டி. சுமதி
எஸ். அல்லி
*திருமகள் சந்திரசேகர்
தர்மலிங்கம் லிங்கேஸ்வரன்
கார்த்திகேயன் பாலதண்டாயுதம்
நடராஜன் ரமேஷ்
ஜி.கே. முத்துக்குமார்
ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன்
சங்கரநாராயணன் ரவிக்குமார்
நாகராஜன் திலீப்குமார்
எல்லப்பன் மனோகரன்
கிருஷ்ணசுவாமி கோவிந்தராஜன்
ரஜ்னிஷ் பதியில்
அப்பாதுரை (எ) கந்தவேல் அப்பாதுரை
ராமசாமி அனிதா
சண்முகம் கார்த்திகேயன்
பாலுச்சாமி முருகேசன்
என். குணசேகரன்
உயர்நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், அவர்களை இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்டது கொலீஜியம் அமைப்பு. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான இக்குழுவில் மூத்த நீதிபதிகள் இடம்பெற்று இருப்பார்கள்..







