21 வயசுக்கு கீழ இருந்தா NO மது

மிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 700 டாஸ்மாக் கடைகளை மூடி அதிரடி காட்டிய நிலையில், தற்போது மது விற்பனையில் மற்றுமொரு அதிரடி கட்டுப்பாட்டை டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ளது.

21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறும் பணியாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடைகளில் ‘இருட்டு அறையில்’ இருப்பவர்களுக்கு மது வழங்கக் கூடாது என்றும், வாடிக்கையாளர்களின் வயதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.