தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் இறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இது “தொங்கு சட்டசபை” நிலையை நோக்கியே நகரும் எனத் தான் ஏற்கனவே கணித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.மக்கள் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் “கூட்டணி ஆட்சி” முறையைத் தான் மக்கள் விரும்புகின்றனர் என்பதை இந்த முடிவுகள் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.தனிப்பெரும் கட்சிகளின் ஆதிக்கத்தை விட, பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிப்பதையே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தத் தீர்ப்பு ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் எனவும், அதிகாரப் பகிர்வு மற்றும் ஜனநாயகக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் இது எனவும் திருமாவளவன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
திருமா கணித்தபடியே மாறிய தமிழக அரசியல்.!!





