நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் இடையிலான விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் அவரது விவாகரத்து வழக்கு தொடர்பான தகவல்கள் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று விவாகரத்து வழக்கில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், விஜய் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. சங்கீதாவும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது இரு தரப்பினரும் நேரில் ஆஜராகாத நிலையில், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆஜராகியுள்ளனர். மேலும், அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பரஸ்பரமாக ஆலோசித்து, சுமூகமாக பிரிந்து விடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீதிபதி வழக்கை உடனடியாக விசாரிக்காமல், ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே இந்த வழக்கைப் பற்றி பல்வேறு தகவல்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலம், சொத்து பங்கீடு போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இருவரும் நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இன்றைய விசாரணை நாளில் விஜய் அதை செய்துள்ளார். அப்போது தான் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று விஜய் தரப்பு மற்றும் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்துகளின் அடிப்படையில் 250 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக சங்கீதா கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் 35 கோடி தர விஜய் முன் வந்ததாகவும் தனது மகன் ஜேசன் சஞ்சய் மகள் சாசாவை தானே பராமரித்துக் கொள்வதாக விஜய் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு சங்கீதா தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில் மனமொத்து பிரிவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதனையடுத்து தான் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி. தற்போது தேர்தல் பரப்புரையில் விஜய் பிஸியாக இருக்கும் நிலையில் அடுத்த மாதம் வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தான் விஜயின் கோரிக்கையை ஏற்று ஜூன் மாதத்திற்கு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.






