2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே சிறிது காலம் கருத்து முரண்பாடு இருந்து வந்தது.
ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி பிளவடைந்து, காங்கிரஸ் தவெக வுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. திமுக காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது. இதனால், தவெக தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், தவெக வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுன், “திமுகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி அமைத்துள்ளனர். அதனால், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெக வில் இணையக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் காங்கிரஸ் நிர்வாகிகள், தவெக வில் இணைய உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.







