அதில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கான சைடு டிஸ்களும் குறைக்கப்பட்டன. மேலும்,கலவை சாதங்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பிரபலமான உணவகங்கள் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன. இப்படியாக கொரோனா ஊரடங்கு காலத்தை போல தற்போது மாறி உள்ளது. வணிக சிலிண்டர் போல, வீட்டு உபயோக சிலிண்டரின் கட்டுப்பாடும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.இதற்காக பெரும்பாலான உணவகங்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி விட்டன. இதனால், விறகு விலையும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் டீ கடைகளில் பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்ட தின்பண்டங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, எதிர்பாராத விதமாக, டி மற்றும் காபிகளின் விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. பொதுவாக சாலையோர டீ கடைகளில் ஒரு கப் டீ ரூ.10 அல்லது ரூ.12- க்கு விற்பனை செய்யப்படும்.










