கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ரயில்வே திருமண மண்டபம் அருகே உள்ள பாலத்தின் அருகே ரயில்வே குடியிருப்பு உள்ளது .நேற்று முன்தினம் இரவு அங்கு சிறுத்தை ஒன்று ரோட்டை கடந்து காம்பவுண்ட் சுவரில் ஏறுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்தனர். இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . போலீசார்மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணித்தனர். ஆனால் சிறுத்தை நடமாடியதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிய வந்தது. அதன்பிறகு இரவில் எடுக்கப்பட்ட அந்த செல்போன் வீடியோ காட்சி போலீசார் வனத்துறை அதிகாரிகள் பார்த்தனர் .அப்போது வனத்துறையினர் அது சிறுத்தை அல்ல. பெரிய காட்டுப் பூனை என்று அறிவித்ததால் குழப்பம் தீர்ந்தது. அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டமா..?








