டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற தவறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு, தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அதாவது சுமார் 16.28 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
குரூப் ஸ்டேஜில் இந்தியாவிடம் தோற்றது மற்றும் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் கண்ட தோல்வி ஆகியவை இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. அணியின் மோசமான செயல்பாட்டால் வாரிய அதிகாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஜாவேத் மியான்டட், முகமது யூசுப் மற்றும் மொயின் கான் போன்ற முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு மற்றும் வீரர்களின் திறமையின்மை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக பாபர் அசாம், ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி மற்றும் தற்போதைய கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.தோல்வியை தொடர்ந்து சல்மான் அலி ஆகா தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்தர அணிகளை தோற்கடிக்கும் திறன் இல்லாதவரை பாகிஸ்தானால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது என முன்னாள் கேப்டன்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.









