NCERT 8-ம் வகுப்பு புத்தகத்துக்கு தடை

புதுடெல்லி: என்​சிஇஆர்டி 8ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்து உள்​ளது.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதிமன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து உள்​ளது.

தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு நேற்று வழக்கை விசா​ரித்​தது. அப்போது பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதற்கு மத்​திய அரசின் சொலிசிட்​டர் ​ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில் கூறியதாவது: “இந்த விவ​காரத்​துக்கு நிபந்தனையற்ற மன்​னிப்பு கோரு​கிறேன். புத்​தகத்​தில் குறிப்​பிட்ட அத்தி​யா​யத்தை எழு​தி​ய​வர்​கள் இனிமேல் புத்​தகக் குழு​விலோ, கல்​வித் துறை​யின் பணி​யிலோ ஈடு​படுத்​தப்பட மாட்டார்கள். சந்தைக்​குச் சென்ற 32 புத்​தகங்​களும் திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளன. ஒட்​டுமொத்த புத்​தக​மும் மறு ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​படும். இந்த வழக்கில் மூத்த வழக்​கறிஞர்​கள் அபிஷேக் மனு சிங்​வி, கபில் சிபில் ஆகியோர் ஆஜரானார்கள்.பின்னர் அனைத்​துத் தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த விவகாரத்தில் மத்​திய கல்​வித் துறை செயலர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் இயக்​குநர் தினேஷ் பிரசாத் சக்​லானி உரிய விளக்​கம் அளிக்க வேண்​டும். நீதித் துறையில் ஊழல் என்ற அத்​தி​யா​யத்​துடன் வெளி​யான 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​துக்கு தடை விதிக்கப்படுகிறது. அச்சு மற்​றும் டிஜிட்​டல் உள்​ளிட்ட அனைத்து வகை​யிலும் பாடப் புத்​தகத்தை நீக்க வேண்​டும்.

இதுதொடர்​பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்சிலும், மத்​திய அரசும் பிர​மாண பத்​திரத்தை தாக்​கல் செய்ய வேண்​டும். இந்த உத்​தர​வு​களைச் செயல்​படுத்தியது தொடர்​பான பிர​மாண பத்​திரங்​களை அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களின் கல்வி துறை​யின் முதன்​மைச் செயலாளர்​கள் 2 வாரங்​களுக்​குள் தாக்​கல் செய்ய வேண்​டும்.

இந்​தப் புத்​தகத்தை அச்​சிட​வோ, டிஜிட்​டல் வடி​வில் பகிரவோ தடை விதிக்​கப்​படு​கிறது. தடையை மீறு​வோர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கப்​படும். வழக்​கின் அடுத்த கட்ட விசா​ரணை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்​கப்​படு​கிறது. இவ்வாறு தலை​மை நீதிப​தி அமர்​வு உத்​தர​விட்​டது.