கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன் தவணைக் காலம் முடிவடைந்த திட்டங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். தவணைத் தொகையைத் தாமதமாகச் செலுத்தியதற்கான அபராத வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டியும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில், ஆண்டுக்கு 5 மாதங்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்தச் சலுகைத் திட்டம் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். ஒதுக்கீடுதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 8,204 ஒதுக்கீடுதாரர்கள் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்குச் சுமார் ₹50.60 கோடி வரை வட்டிச் சலுகை கிடைக்கும். நிலுவைத் தொகையைச் செலுத்தியவுடன், எவ்விதச் சிக்கலுமின்றி தங்கள் வீடுகளுக்கான விற்பனைப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.கடன் சுமையைக் குறைத்து, உங்கள் வீட்டின் முழுமையான உரிமையாளராக மாறக் கிடைத்துள்ள இந்த இறுதி வாய்ப்பை பயனாளிகள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.









