அதி விரைவு நமோ பாரத் ரயில் சேவை..

நாட்டில் அதி விரைவு மெட்ரோ ரயில் சேவையான நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் மெட்ரோ சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நமோ பாரத் ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லி-காஜியாபாத் – மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மீதமுள்ள 27 கி.மீ. நீளப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.புதுதில்லி மற்றும் மீரட்டை இணைக்கும் இந்தியாவின் முதல் முழுமையாக செயல்படும் 82.15 கி.மீ. கொண்ட மெட்ரோ ரயில் பாதையாகும்.புதுதில்லி-காஜியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மொத்தம் 16 நிலையங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 11 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.