பட்டி,தொட்டி,கிராமங்கள் விசில் விநியோகம்!

அரசியல் களத்தில், வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலை, தமிழக வெற்றிக்கழகம் சந்திக்க முனைப்போடு பணியாற்றி வருகிறது. மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம், தமிழகம் முழுதும் இருக்கக்கூடிய மக்களிடையே, அதன் தேர்தல் சின்னமான விசிலை கொண்டு செல்லும் பணியை மும்மரமாக செய்து வருகிறது. பட்டி, தொட்டி, கிராமங்கள், நகரம் என அனைத்து பகுதிகளிலும் இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், மக்களிடம் விசிலை கொடுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி கிராமத்தில், தெற்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் முரளி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் விசில் கொடுக்கப்பட்டது.