மத்தியில் modi… தமிழ்நாட்டில் Edappati…

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை. உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்.உதயநிதி பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது , தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். நாளை பிரதமர் பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சியமைத்தபின், தமிழ்நாடு இதுவரை அடையாத உயரங்களை அடையும். தமிழக அரசு எல்லா துறைகளிலும் தோல்வி கண்டுவிட்டது. சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது என்று கூறினார்.