இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நலத்திட்ட உதவிகள், ஆலம் பசுமை பண்ணையில் உள்ள ஐ.ஜே.கே மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து வழிகாட்டுதலின்படி – மாநில இணைப் பொதுச் செயலாளர் லீமாரோஸ் மார்ட்டின் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவில் சுமார் சுமார் 300-க்கும் மேற்பட்ட மகளிர் பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பினார்கள்.சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிசி, பருப்பு, சமையல் ஆயில், நாட்டு சக்கரை, போர்வை,அடங்கிய நல உதவிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு லீமா ரோஸ் மார்டின் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்.அனைவருக்கும் சமபந்தி மதிய உணவு வழங்கப்பட்டது.விழா நிறைவாக கோலாட்டம், கும்மியாட்டம், உறியடி போன்ற சமுதாய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.








