தேசிய தன்னார்வ இரத்ததான முகாம்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.விழாவை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பேசுகையில்,நாம் அனைவருக்கும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியமாகும்.
அரசு மருத்துவமனையில் சீமான் சென்டர் என்ற ஒரு பிரிவு இயங்கி வருகிறது.அதில் மருத்துவர்கள் செவிலியர்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு சேவையாற்றி வருகின்றனர்.

இரத்த தானம் செய்வதற்கு தனி நபர் வாயிலாகவோ தன்னார்வலர் அமைப்புகள் வாயிலாகவோ இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.அதேபோல் ஒரு தனிநபர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் கொடுக்கலாம்.தாங்கள் மட்டும் இரத்ததானம் கொடுத்தால் போதாது, இளைஞர் சமுதாயத்திற்கு இரத்ததானம் வழங்குவதின் அவசியத்தை இளைய சமுதாயத்தினருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.இன்று இரத்ததானம் வழங்குவதற்கு தன்னார்வப்பட்டு வருகை தந்த நீங்கள் தான் இந்த விழாவின் தலைமை விருந்தினர்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி பேசினார்.

மேலும் இன்று நடைபெற்ற விழாவில். 68 இரத்ததானம் வழங்கும் தன்னார்வலர் அமைப்புகளுக்கு கேடயமும் பாராட்டு சான்றிதழ்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி கௌரவித்தார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வீரமணி, துணை முதல்வர் சலீம், மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு மற்றும் மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி காசநோய் பிரிவு இணை இயக்குனர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..