வேனில் 20 டன் ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் – ஒருவர் கைது..!

கோவை மதுக்கரை அருகே போலீசார் இன்று காலையில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவுக்கு சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 20 டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த ஜெலட்டின் குச்சிகளை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது .கேரளாவில் சட்ட விரோதமாக சுரங்கப் பணிக்காக இந்த ஜெலட்டின் குச்சிகளை வாகனத்தில் ஏற்றி சென்றது தெரிய வந்தது.இது தொடர்பாக சுபைர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.